தொடர் விடுமுறை முடிந்து சென்னை நோக்கி மக்கள் படையெடுத்ததால் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறை முடிந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு சென்ற பயணிகள், அங்கிருந்து சென்னைக்கு வரும் பேருந்துகளில் முண்டியடித்து கொண்டு ஏறினர்.