காஞ்சிபுரம் மாவட்டம் நாகப்பட்டு கிராமத்தில் பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட மக்களை போலீசார் கைது செய்தனர். கிராம மக்களிடம் தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனளிக்காததால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.