விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் சொந்த ஊர் நோக்கி படையெடுத்து சென்றதால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.கல்வி மற்றும் பணிக்காக சென்னையில் வசித்து வரும் மக்கள், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக, பேருந்துகள், கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் புறப்பட்டு சென்றனர்.இதனால் குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.