தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற தென்மாவட்ட மக்கள், விடுமுறை முடிந்து மீண்டு சென்னை திரும்பியதால், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்துகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அதிகளவில் சென்னை நோக்கி படையெடுத்ததால், செங்குறிச்சி சுங்கச்சாவடியில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து நெரிசலை சரிசெய்யவும், விபத்து ஏற்படாமல் தடுக்கவும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.