ஆயுத பூஜை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பொதுமக்களால் சென்னை புறநகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாம்பரம் - மதுரவாயல் புறவழி சாலையில் உள்ள வானகரம் சுங்கச்சாவடியில் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டன.