காஞ்சிபுரம் மாவட்டம் திருவானைக்கோயில் ஊராட்சியில் புறம்போக்கு நிலங்களை வீட்டு மனைகளாக மக்கள் பிரித்து கொண்ட நிலையில், இதற்கு தனி நபர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்துள்ளது. கிராம மக்களை அச்சுறுத்தும் அன்பு என்பவர் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.