தொடர் விடுமுறையையொட்டி, சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு பயணிப்பதால் வாகன போக்குவரத்து அதிகரித்து, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை அணிவகுத்த வாகனங்கள் ஊர்ந்தபடி சுங்கச்சாவடியை கடந்து சென்றன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களை எதிர் திசையில் உள்ள இரண்டு வழித்தடங்களில் செல்லுமாறு போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.