திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பெருமாள் கோவில்பட்டி பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் 5 குடியிருப்புகளுக்கு மட்டுமே மின்சார வசதி உள்ளதாகவும், அப்பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை எனவும் புகார் தெரிவித்தனர்.