கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள ஹஜ்ரத் நூர் முஹம்மது ஷா அவுலியா தர்காவில் கந்தூரி உரூஸ் பண்டிகையொட்டி மக்கள் கூட்டம் அலைமோதியது. கந்தூரி உரூஸ் விழாவையொட்டி தர்கா முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மேலும், வார விடுமுறையொட்டி குடும்பத்துடன் குவிந்த மக்கள், அங்கு அமைக்கப்பட்டிருந்த ராட்டினங்கள் உள்ளிட்டவைகளில் விளையாடி மகிழ்ந்தனர்.