கோவை மாவட்டம் தோலம்பாளையம் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகிக்கப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தோலம்பாளையம் பகுதி மக்கள் குடிநீர் பிரச்சனை குறித்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து காரமடை சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அவர்களிடம், காவல் ஆய்வாளர் ஞானசேகரன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேந்திரனிடமும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.