வேலூர் மாவட்டம் குடியாத்தம் பாண்டியன் நகரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு 4 மணிநேரம் தாமதமானதால் மக்கள் சிரமம் அடைந்தனர். தொகுப்புடன் வழங்கப்படும் பணத்தை வங்கியில் எடுக்க சேல்ஸ்மேன் சென்று வரவே நீண்ட நேரமான நிலையில் கைரேகை மிஷினும் பழுதாகியதால் ரேசன் கடைக்கு முன்பாக மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.இதனையடுத்து, மிஷின் பழுது பார்க்கப்பட்டு பொங்கல் தொகுப்பு நண்பகல் 12 மணிக்கே வழங்கப்பட்டது.இதையும் படியுங்கள் : பணி நிரந்தரம் செய்து சிறப்பு கால முறை ஊதியம் வழங்குக