புரட்டாசி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை முடிவடைந்த நிலையில், கடலூரில் உள்ள இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கோழி மற்றும் ஆட்டிறைச்சி கடைகளில் திரண்ட அசைவ பிரியர்கள் காத்திருந்து இறைச்சி வாங்கி சென்றனர். ஆட்டிறைச்சி கிலோ 750 ரூபாய்க்கும், கோழி இறைச்சி கிலோ 220 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.