புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை முடிவடைந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்கள் திரண்டனர். அதிகாலை நான்கு மணி முதலே ஏராளமான மக்கள் குவிந்த நிலையில் மீன்களின் விலை சற்று அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வஞ்சிரம் மீன் 500 ரூபாய்க்கும், சங்கரா மீன் 150 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அதேபோல் பாறை மீன் 200 ரூபாய்க்கும், இறால் 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.