புதுக்கோட்டை பெரியார் நகர் பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் கேட்டு அப்பகுதி மக்கள் சாலையில் பாய் விரித்து படுத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரியார் நகர் பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் கேட்டு போராடி வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.