ஆயுதபூஜை, சரஸ்வதி பண்டிகை விடுமுறை முடிந்து, சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு மக்கள் வருகை தந்ததால் பெருங்களத்தூர்,தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெருங்களத்தூர் GST சாலையில் வாகனங்கள் ஆமை போல் ஊர்ந்து சென்றதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.