திருப்பூர் மாவட்டம் இடுவாய் கிராமம் அருகே குப்பை கிடங்கு அமைக்கும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் 500க்கும் மேற்பட்டோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சின்ன காளிபாளையம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் குப்பை கொட்டுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த மக்கள், குப்பை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.