தென்காசி மாவட்டம் கடையம் அருகே கனிம வளங்கள் ஏற்றி சென்ற கனரக லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் தனியார் கல் குவாரிகளிலிருந்து கேரளாவிற்கு தினமும் நூற்றுக்கணக்கான கனரக லாரிகளில் கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில் ஏ.பி.நாடானூர் பகுதியில் பள்ளி வேளையில் கனிம வள லாரிகளை இயக்கக்கூடாது என காவல் நிலையத்தில் புகார் அளித்தும், லாரிகள் வந்து சென்ற வண்ணம் இருந்தன. இதனை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.