நாகை அருகே பிரதாபராமபுரம் சின்னேரியில் 540 மீட்டர் பரப்பளவில் அமையவுள்ள மண்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் மூன்று மணி நேரமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கையில் பதாகைகளுடன் பேரணியாக வந்து கைகாட்டி பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு உடன்பட்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையும் படியுங்கள் : பெயிண்டிங் தொழிலாளர்கள் பலியான சம்பவம் நான்கு பேரை கைது செய்து போலீசார் விசாரணை..!