மயிலாடுதுறை நகராட்சியுடன் மன்னம்பந்தல் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை நகராட்சியின் வார்டுகள் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல், ரூரல் ஆகிய ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்க பணிகள் நடைபெறுவதை அறிந்த மக்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர். அந்த நகலை ஆட்சியர் மகாபாரதியிடம் ஒப்படைக்க வந்த போது, அவர் அலுவலகத்தில் இல்லாததால் மன்னம்பந்தல் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.