விடுமுறையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகளால் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை தொடர் விடுமுறை உள்ளதால் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்தனர்.இதனால் மூஞ்சிக்கல், சீனிவாசபுரம், வாஸ்காடு ரோடு, கல்லறை மேடு, ஏரிச்சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.