கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மருதேரி உள்ள பட்டாளம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, அகரம் தாய் கிராமத்து மக்கள் மேளதாளங்கள் முழங்க சீர்வரிசை எடுத்து ஊர்வலமாக சென்று சாமி தரிசனம் செய்தனர். பழமை வாய்ந்த பட்டாளம்மன் கோயில் புதுப்பிக்கும் பணி கடந்து நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.