கும்பகோணத்தில் பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு கொலை மிரட்ட விடுத்த நபர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திருவாரூரை சேர்ந்த பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், தான் கும்பகோணத்தில் உள்ள தனியார் நகைக்கடையில் வேலை செய்த போது, கடையின் உரிமையாளர் ரிஸ்வான் என்பவர் தன்னிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி பல முறை பாலியல் துன்புறுத்திலில் ஈடுபட்டதுடன், மணிகண்டன், ஜாகிர் உசேன் ஆகியோருடன் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்றதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை பெண் கூறிய நிலையில், வழக்கு பதிவு செய்ததன் அடிப்படையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.