மூன்று நாள் தொடர் விடுமுறையொட்டி மக்கள் சொந்த ஊருக்கு படையெடுத்ததால், செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஜிஎஸ்டி சாலையில் ஏராளமான பேருந்துகள் மற்றும் கார்கள் சென்றதால் நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஆமை வேகத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.