ஓணம் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து ஏராளமானோர் கேரள மாநிலத்திற்கு செல்வதால், திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் கட்டணம் மூன்று மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளது. அதிக அளவு மக்கள் பயணிப்பதால் பெரும்பாலான விமானங்களில் டிக்கெட்டுகள் இல்லாத நிலையில், ஒரு சில விமானங்களில் உயர் கட்டண டிக்கெட்டுகள் மட்டும் இருக்கிறது. ஆனாலும் பயணிகள் டிக்கெட் கட்டண உயர்வை பொருட்படுத்தாமல், பயணம் செய்கின்றனர். நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் கேரள மாநிலத்தவர்கள் ரயில், பஸ், கார் மூலமாகவும் சொந்த ஊர்களுக்கு பயணிக்கின்றனர்.