விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் பொருட்களை மக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர்.தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட கரும்பு, பூசணி, கம்பூ, வாழை, பூ, பழங்கள், விநாயகர் சிலை, தோரணம், குடை ஆகியவற்றை வாங்குவதற்கு கோயம்பேடு சந்தையில் மக்கள் குவிந்தனர்.மேலும் மார்க்கெட் நிர்வாகம் தற்காலிக சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்காததால் வெளியூரில் இருந்து வந்த வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.