தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க சென்னை குரோம்பேட்டை பகுதிகளில் மக்கள் குவிந்ததால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்ற நிலையில், வாகன ஓட்டி ஒருவர் போக்குவரத்து காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக சென்னையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த வாகனங்கள், பல்லாவரம் மேம்பாலத்தில் இருந்து இடது புறமாக திருப்பி விடப்பட்டது.