கொடைக்கானலில் தொடர் விடுமுறையை ஒட்டி சுற்றுலா பயணிகள் குவிந்ததால் மலைச்சாலைகளில் இரண்டாவது நாளாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி மற்றும் தொடர் விடுமுறையை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலை நோக்கி படையெடுத்தனர். சீனிவாசபுரம் பகுதியில் குறுகிய சாலையில் இரண்டு அரசு பேருந்துகள் ஒன்றை ஒன்று உரசி கொண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுமார் 3 கிலோ மீட்டர் வரை அணிவகுத்து நிற்கும் நிலைக்கு வாகன ஓட்டிகள் தள்ளப்பட்டனர்.