வார விடுமுறையையொட்டி குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. குற்றால அருவிகளில் சீசன் முடிந்ததாக கருதப்பட்ட நிலையில் கடந்த வாரம் பெய்த மழையால் அருவியில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து அருவிகளில் நீர்வரத்து குறைந்தாலும், குற்றாலத்திற்கு குடும்பத்துடன் வந்த சுற்றுலா பயணிகளால் அருவி பகுதி களைக்கட்டி காணப்பட்டது.