தொடர் விடுமுறையையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. பழைய மாதா கோவில், விண்மீன் ஆலயம், புதிய மாதா கோவிலில் கூட்டம் அலைமோதிய நிலையில் குடும்பத்தினருடன் கடலில் குளித்து மகிழ்ந்தனர். கடற்கரையில் கூட்டம் அதிக அளவில் உள்ளதால் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.