ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 14ம் தேதியோடு முடிவடைய இருந்த நிலையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஆதார் கார்டை புதுப்பித்து வருகின்றனர்.பொதுமக்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு அடிப்படை வசதிகளுடன் கூடிய கூடுதல் மையங்களை அமைக்கவும் கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.