ராமநாதபுரம் மாவட்டத்தில் மேம்பாலம் கட்டும் பணியின் போது மகாலிங்கபுரம், சூச்சனி கிராமங்களுக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒருவருடமாக சீரான குடிதண்ணீர் வரவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காசு கொடுத்து தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வரும் மக்கள் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.