கோவை மாவட்டம் அன்னூர் அருகே பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் குடிநீர் செந்நிறத்தில் வந்ததாக புகார் எழுந்துள்ளது. வடவள்ளி ஊராட்சி நிர்வாகம் சார்பில் பெரிய புத்தூர் பகுதியில் வழங்கப்பட்ட குடிநீரில், மண் மற்றும் குப்பைகள் கலந்து வந்ததால், அந்த தண்ணீரை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.