காலாண்டு விடுமுறையை ஒட்டி தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தளங்களில் அதிகளவில் குவிந்த மக்கள், அருவிகளில் குளித்தும், உற்சாகமாக புகைப்படங்களை எடுத்தும் மகிழ்ந்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள், நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தபடியே மேகமூட்டத்தை கண்டுரசித்தனர். அத்துடன் ஏரிச்சாலையை சுற்றியும் குதிரை மற்றும் சைக்கிள் சவாரி செய்த மக்கள், பிரையன்ட் பூங்காவில் சாரல் மழையுடன் பூக்களை பார்த்து ரசித்து புகைப்படங்களை எடுத்து கொண்டனர்.