விருதுநகர் மாவட்டம், சிவகாசி, சாட்சியாபுரம் பாலம் திறக்கப்பட்டதை மக்கள் வாண வேடிக்கைகளை நிகழ்த்தி கொண்டாடினர். சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரம் ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது சிவகாசி மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது. இதனடிப்படையில் கடந்த 2024, ஜூலை மாதம் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி 61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்பட்டு பணிகள் முழுமையாக நிறைவு பெற்றது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார். முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால ஏக்கத்தை, பொது மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதையும் பாருங்கள் - 30 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறிய சந்தோஷத்தில் இரவை பகலாக்கிய சிவகாசி மக்கள் | Sivakasi new bridge