நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 4 ஆவது மற்றும் 8 ஆவது வார்டு பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்கவில்லை என கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பழைய பேருந்து நிலையம் செல்லும் சாலை அருகே பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.