திருப்பத்தூர் மாவட்டம் பல்லலப்பள்ளி பகுதியில் 35 வருட காலமாக இருந்த தொலைக்காட்சி அறையை எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி ஜேசிபி இயந்திரம் கொண்டு இடித்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நியாய விலை கடை அமைக்க ஊராட்சி மன்ற தலைவர் தொலைக்காட்சி அறையை இடித்ததால் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர். போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.