திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வடக்கு தாதநாயக்கன்பட்டி கிராமத்தில் சுமார் 350 வீடுகள் உள்ளன.பெருபான்மையினர் வசித்து வருகின்றனர். இங்கு ஊருக்குள் வரும் பாதையில் கனரக வாகனங்கள் மிக கனரக வாகனங்கள் கிரஷர் லாரியில் (40 டன்) கற்கள் மற்றும் மணலை எற்றிச்செல்வதால் தார் சாலைகள் மிகவும் பழுதாகி உள்ளது. மேலும் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. வாகனங்கள் வரும் வேகத்திற்கு புழுதி கிளம்புவதால் இங்கு குடியிருப்போருக்கு உடல் உபாதைகள், சளி தொல்லை, ஆஸ்துமா பிரச்சனைகள் உள்ளது. அருகில் சத்துணவு கூடம்(அங்கன்வாடி மையம்). இங்கு குழந்தைகள் இருப்பதால் அவர்களும் பாதிப்பு அடைகின்றனர். அருகில் துணை சுகாதார நிலையம், அரசு தொடக்க ஆரம்பப்பள்ளி, ரேசன் கடை இருப்பதால் வாகனங்கள் வரும் பொழுது புழுதி கிளம்புவதால் மாணவர்களும், பொது மக்களும், பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்த கனரக வாகனங்கள் இரவிலும் செல்வதால் அதன் அதிர்வு சத்தம் இருப்பதால் வீடுகளில் தூங்க முடியாமல் தவிக்கின்றோம். மேலும் இப்பாதையில் கிராம குடிநீர் ஆதாரமாக உள்ள பைப் லைன் அனைத்தும் இதன் வழியே இருப்பதால் பைப்லைன் உடைப்பு ஏற்படுவதாலும், குடிநீர் தட்டுபாடு உண்டாகிறது. வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இதுகுறித்து பழனி வட்டாட்சியர் மற்றும் சார் ஆட்சியர் அவர்களுக்கும் பதிவுதபால் அனுப்பியும் இதுவரை எங்களுக்கு எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. ஆகையால் அதிகாரிகள் துறை ரீதியாக அதிகாரிகள் ஆய்வு செய்தும் வாகனங்களை மாற்று தார்சாலையை சரி செய்தும் கொடுத்தும், கனரக வாகனங்களை மாற்று வழியில் கொண்டு செல்ல உத்தரவு தருமாறு கோரிக்கை விடுத்து தீடிர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. Related Link பெண் பக்தரை மாடு முட்டியதன் சிசிடிவி காட்சி