ஈரோடு மாவட்டம் பவானியில் சிறுவர்களை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மண் தொழிலாளர் இரண்டாவது வீதியை சேர்ந்த முனியப்பன் என்பவரின் மகன், அதே பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இதை தட்டிக் கேட்ட முருகேசன் என்பவர் மீதும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புகார் அளிக்க சென்றால், அதை காவல்துறையினர் ஏற்க மறுப்பதாக கூறி, நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையும் படியுங்கள் :அரசு பள்ளியில் வழங்கிய காலை உணவில் பல்லி விழுந்த விவகாரம்... பள்ளி சமையலர் இருவர் பணியிடை நீக்கம் - அதிகாரிகள் நடவடிக்கை