திருவள்ளூரில் தனியார் நகைக்கடை திறப்பு விழாவிற்காக, சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கலர் காகிதங்களை பறக்கவிட்டு நடன நிகழ்ச்சி நடைபெற்றதால், வாகனஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தனியார் நிகழ்ச்சிக்காக சாலையை ஆக்கிரமிப்பு செய்ததற்காகவும், பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காகவும் நகைக்கடை மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.