நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே அரசு பேருந்து பயணத்தின் போது பாதி வழியில் பழுதாகி நின்ற பேருந்தால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து குமாரபாளையம் நோக்கி சென்ற அரசு பேருந்து ஒட்ட மெத்தை பேருந்து நிலையத்தில் பழுதாகி நின்ற நிலையில், பள்ளி மாணவர்களைக் கொண்டு பேருந்தை தள்ள வைத்து எடுத்து சென்றனர்.