சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேலப்பசலை கிராம கண்மாய் மடையில் இருந்து எம்.கரிசகுளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மடை உடைந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. எம்.கரிசகுளம் கால்வாய்க்கு நாட்டார் கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடாமல் மடை வழியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் திறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மேலப்பசலை கிராம கண்மாய் நிரம்பி அழகு நாச்சிபுரம் கீழத் தெருவில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து, அங்கிருந்த மக்கள் இரவு தேவாலயத்தில் தங்க வைக்கப்பட்டனர்.