திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த செட்டிகுளத்தில் இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மது அருந்துவிட்டு சாலையில் செல்லும் பொதுமக்களிடம் சிலர் வம்பிழுத்து சண்டை போடுவதாகவும், மது அருந்திய பின் காலி பாட்டில்களை சாலையில் போட்டு உடைப்பதால் மாணவர்கள், பெண்கள் சாலையில் நடந்து செல்ல முடியவில்லை எனவும் கூறி தெள்ளார் - தேசூர் சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.