திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் பள்ளத்திற்குள் இறங்கி தண்ணீர் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. முனியூர் பகுதியில் 450-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், ஒரே ஒரு குடிநீர் தொட்டி மட்டுமே உள்ளது. இதனால் குடிநீர் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், ஒரு சில பகுதிகளில் மக்கள் பள்ளம் தோண்டி தண்ணீர் பிடித்து வருகின்றனர். இதனால் கூடுதலாக ஒரு குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.