சென்னை அடுத்த குரோம்பேட்டை பகுதியில் ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் சாலையில் பயணித்ததால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குரோம்பேட்டை பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளதால், அங்கு பொருட்களை வாங்க ஏராளமானோர் ஒரே நேரத்தில் வாகனங்களில் வருகை தந்தனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.