நீலகிரி மாவட்டம் குன்னூர் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை ஒன்று உலா வரும் சிசிடிவி காட்சி வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அட்டடி பகுதியில் உள்ள குடியிருப்பு சாலையில் இரவு நேரத்தில், சிறுத்தை ஒன்று ஒய்யாரமாக நடந்து சென்றது. சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.