Also Watch
Read this
ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பாலத்தால் மக்கள் பாதிப்பு.. சாலையை விட 3 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலம்
பாலத்தின் அவலம்
Updated: Sep 03, 2024 03:08 AM
வாய்க்கால்பட்டி, தேனி
ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பாலத்தால் மக்கள் பாதிப்பு
சாலையை விட 3 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலம்
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையினர் அமைத்த பாலம்
ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் அவலம்
பாலத்தை கடக்க முடியாமல் மாற்றுத்திறனாளிகள் அவதி
உயரமான பாலத்தால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிப்பு
தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
தேனி அருகே ஆற்றின் குறுக்கே சாலையை விட 3 அடி உயரத்தில் அமைக்கபட்டுள்ள பாலம்
இந்த பாலத்தினால் இறந்தவர்களின் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல முடியாத நிலை
அந்தரத்தில் நிற்கும் பாலத்தினால் பொதுமக்கள் கடும் பாதிப்பு
தேனி அருகேயுள்ள ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மச்சியாபுரம் அருகில்
உள்ள வாய்கால்பட்டி கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் சுடுகாடு
அமைந்துள்ளது
இந்த சுடுகாடு மற்றும் இதனை சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு செல்ல வாய்காலில்
இறங்கியே செல்ல வேண்டிய சூழலில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வாய்காலில்
குறுக்கே 17 லட்சம் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்
நலத்துறை சார்பாக சிறு பாலம் 8 மாதங்களுக்கு முன்பு கட்டபட்டது
சாலையின் உயரத்தை விட 3 அடி உயரத்தில் பாலம் கட்டபட்டுள்ளது- இந்த பாலத்தில்
எவ்வித சிறு வாகனங்களும் செல்ல முடியாமலும்,அதே சமயம் குழந்தைகள், பெண்கள் ,
மாற்றுதிறனாளிகள் இந்த பாலத்தை கடக்க முடியாத நிலையில் இந்த பாலம்
அமைக்கபட்டுள்ளது
பாலத்திற்கும் சாலைக்கும் இனைப்பு வசதியினை ஏற்படுத்தி தராமல் பெயரளவிற்கு
யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் இந்த பாலம் உள்ளது
இந்த பாலத்தினால் இறந்தவர்களின் உடலை சுடுகாடு வரை எடுத்து செல்ல முடியாமல்
உடலை துக்கி கொண்டு செல்லும் நிலை தான் உள்ளதாகவு, மக்களின் பயன்பாட்டிற்காக
பாலம் அமைப்பதை விட்டு விட்டு மக்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த
பாலம் அமைக்கபட்டுள்ளதாக கூறுகின்றனர் இந்த பகுதி மக்கள்’
இது குறித்து ஆண்டிபட்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்ட போது உடனடியாக
ஆய்வு செய்து பாலத்தின் பணிகளை முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்கபடும் என
அவர் தெரிவித்தார்
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved