சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சி நகர் பகுதியில் உள்ள உச்சிமாகாளி அம்மன் கோவிலுக்கு சொந்தமான வீரசின் என்ற தெய்வத்தின் பீடத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உச்சிமாகாளி அம்மன் கோவிலுக்கு வெளியே வீரசின் என்ற தெய்வத்தின் பீடம் உள்ள நிலையில், அதனை சுற்றி பேக்கரி கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் முளைப்பாரி திருவிழா நடைபெற உள்ளதால், ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பொதுமக்கள், பேக்கரி கடைக்காரரிடம் முறையிட்ட போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், திருப்புவனம் பேரூராட்சி அலுவலகம் வரை பேரணியாக சென்ற மக்கள் செயல் அலுவலரிடம் மனு அளித்தனர்.