முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 57ஆவது நினைவு தினத்தையொட்டி, சென்னை அண்ணாசாலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சதுக்கம் வரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் தமிழக அமைச்சர்கள், திமுக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதைஇதனைத் தொடர்ந்து அண்ணாவின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.பேரறிஞர் அண்ணா தமிழர்களின் மனசாட்சிஆண்டுகள் எத்தனை ஆனாலும் தமிழ்நாட்டை தற்போதும் ஆள்வது அண்ணாதான் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாராம் சூட்டியுள்ளார். பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளையொட்டி, தனது எக்ஸ் பக்கத்தில், நினைவுநாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அண்ணனை நினைக்கும் நாள்தான் என பதிவிட்டுள்ளார். மேலும், மொழித் திணிப்பு, நிதி நெருக்கடி என்றெல்லாம் வஞ்சகங்கள் செய்துவிட்டு, துரோகிகளையெல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்தாலும் பாஜக அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் GETOUT தான் என்றும் தெரிவித்துள்ளார். Related Link விஜய்யின் கற்பனை திருக்குறள்