திருச்சி மாவட்டம் மணப்பாறையில் முறையாக விசாரணை நடத்தாமல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு ஊராளி கவுண்டர் கூட்டமைப்பு சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. கல்பட்டியில் ஒரு சமூகத்தினர் மீது மற்றொரு சமூகத்தினர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் முறையாக விசாரணை நடத்தாமல் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்ததாக குற்றம்சாட்டி, திருச்சி, மதுரை, திண்டுக்கல் சாலைகளில் இரு சக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களில் பேரணியாக சென்றனர். பேரணி பாரதியார் நகரை சென்றடைந்த நிலையில், அங்கு கண்டன கூட்டம் நடைபெற்றது.