ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதையடுத்து, பவானி ஆற்றில் விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் இந்த நீர்திறப்பு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், பவானி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.